வேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

28 September 2020, 2:07 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வேளாண் சட்டத்தை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை கண்டித்தும், மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அதிமுக அரசை கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் அறிவித்திருந்தன. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Views: - 8

0

0