திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் கைது

19 September 2020, 3:47 pm
Quick Share

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் தொடர்ந்து வியாபாரிகள் காந்தி மார்க்கெட் 6ம் எண் வாயில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட எங்களுக்கு தீர்வு காணும் வரை, காந்தி மார்கெட் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் வந்து பேச வேண்டும் என தெரிவித்தனர். இனைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் கமலக்கண்ணன், கோவிந்தராஜீலு உட்டட 7 பேரை போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல முடியாது என கூறியதையடுத்து அதிரடியாக கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னா மாநகராட்சி ஊழியர்கள் கேட்டிற்கு பூட்டு போட்டனர்.