விவசாய நிலத்தில் பெட்ரோலிய ராட்சத குழாய் பதிக்க விவசாயிகள், பாமக வினர் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நிறுத்தி வைப்பு…

14 August 2020, 10:36 pm
Quick Share

திருச்சி மாவட்டம், திருவாணைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில், சென்னை எண்ணூரிலிருந்து திருச்சி வழியாக தூத்துக்குடி வரை பெட்ரோல் மற்றும் தாதுப்பொருட்கள் ராட்சத குழாய் மூலம் எடுத்துச் செல்ல அப் பகுதி விவசாயிகளுடன் பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி புறநகர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என 20 திற்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இந்திய அரசு ஒப்புதலின் பேரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னை எண்ணூரிலிருந்து திருவள்ளுவர், திருச்சி வழியாக மதுரை, தூத்துக்குடி வரையில் ராட்சத குழாய் மூலம் பெட்ரோலிய தாதுப் பொருட்கள் ( இயற்கை எரிவாயு ) எடுத்துச் செல்ல விவசாய நிலத்தில் ராட்ச குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்சி திருவாணைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் உள்ள விவசாயிகளின் விளை நிலத்தில் பயிருட்டுள்ள பயிர்களை அழித்தும், தென்னை மரம் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கியும் பெட்ரோலிய தாதுப் பொருட்களை எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பகுதியில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்காமல் ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறுவதனை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

விவசாயிகளோடு, திருச்சி புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரன்ஸ் தலைமையில் மாநில இளைஞரணி துணை செயலாளர் நந்தகுமார், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சக்திவேலன், திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் சரவணன், செயலாளர் சரவணன் உள்ளிட்ட 25 ந்திற்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து வேளாண் மண்டலமான திருச்சி பகுதியில் பெட்ரோலிய குழாய் அமைக்கவிடமாட்டோம் எனக்கூறி குழாய்கள் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

Views: - 10

0

0