வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

27 September 2020, 7:18 pm
Quick Share

திருச்சி: சிறுகனூரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள கணபதி நகரில் வசிப்பவர் கருப்பன் மகன் ரவி(41). இவர் சிறுகனூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வளர்மதி மற்றும் 1 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் ஒரே இடத்தில் இரண்டு வீடுகள் உள்ளது. ஒரு வீட்டில் உள்ள பீரோவில் பணம்,நகைகளை வைத்துள்ளனர். மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் உறங்கியுள்ளனர்.

நள்ளிரவில் ரவியின் மனைவி வளர்மதி இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்தபோது மர்மநபர் ஒருவர் வீட்டிற்கு வெளியே நிற்பதை கண்டு பயந்துபோய் தனது கணவரிடம் கூறி வெளியே வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரொக்கம் ரூ. 1 லட்சம், நகை 5 பவுன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்திறக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் அர்ஜீன், வரவழைககப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.