மது போதையில் கோயிலில் தூங்காதே என கூறிய மூதாட்டி அடித்துக் கொலை
7 September 2020, 8:54 pmதிருச்சி: மது போதையில் கோயிலில் தூங்காதே என கூறிய மூதாட்டி அடித்துக் கொலை செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த கல்லக்குடி அருகே கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் வசிப்பவர் 75வயதான பழனியம்மாள். இவரது கணவர் இளம் வயதிலேயே உயிரிழந்த நிலையில், இவரது ஒரே மகளை பழனியம்மாள் திருமணம் முடித்து வைத்து இவர் மட்டும் அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். பழனியம்மாள் வீட்டின் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தி, வாசலில் கோலம் போடுவது போன்ற இறை பணியில் ஈடுபட்டுள்ளார் மூதாட்டி மாரியம்மன் கோயில் முன் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் தூங்குவார்களாம். இதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த 57வயதான அந்தோணிசாமி மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கோவண்டாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கல்லக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின், பேரில் போலீஸார் அந்தோணிசாமி யை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது தனக்கு நீண்ட காலமாக மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால் என்னை விட்டு மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் மாரியம்மன் கோயிலின் முன் தூங்கிய என்னை மூதாட்டி திட்டியதால் ஆத்திரமடைந்து, மதுபோதையில் கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதால் அவர் மீது கல்லக்குடி போலீஸார் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்.
0
0