கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொல்ல முயற்சி: மனைவி மற்றும் கள்ளக்காதலனுடன் கைது

10 November 2020, 6:13 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை (ராணுவ வீரரை) கொல்ல முயற்சி செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமம் பல்ப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 40). இவர் உத்தரபிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வானதி (வயது 32). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் விநாயகமூர்த்தியின் மனைவி வானதிக்கும் மிட்டூர் அடுத்த மரிமாணிகுப்பம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 29) ஆகியோருக்கு இடைய கள்ளகாதல் இருந்து வந்தது. ஜெயக்குமார் ட்ராவல்ஸ் ஒன்று நடத்தி வந்துள்ளார்.

வானதி மகளிர் சுய உதவி குழுவின் மூலமாக அவ்வப்போது டிராவல்ஸ் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஜெயக்குமார் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கள்ளக்காதலாக மாறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ராணுவ வீரர் விநாயகமூர்த்தி சொந்த ஊருக்கு வந்த வந்துள்ளார். இதனால் ஜெயக்குமார் வானதி இருவரும் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இருவரும் செல்போன்களில் பேசிக்கொண்டு உள்ளனர். மேலும் வானதி என் கணவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்து உள்ளார். அதனால் உங்களை சந்திக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராணுவ வீரர் யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வானதி, கள்ளக்காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரும் ராணுவ வீரரை கொல்ல திட்டம் தீட்டி உள்ளனர். வழக்கம்போல் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர் விநாயகமூர்த்தியை அவரது மனைவி வானதியும் கள்ளக்காதலன் விஜயகுமாரும் சேர்ந்து தலையணையால் விநாயகமூர்த்தி முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றனர்.

இதனால் மூச்சு விட முடியாமல் திணறி எழுந்து அவர் ஜெயகுமாரின் கையில் கடித்துள்ளார். பலத்த காயம் அடைந்து ஜெயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் உறவினர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது விநாயகமூர்த்தி மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததை தெரிய வந்தது உடனே அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து விநாயகமூர்த்தி அளித்த புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வானதியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். வானதி கொடுத்த தகவலின் பேரில் தப்பி தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் ஜெயக்குமாரை போலீசார் லாவகமாக பேசி வரவழைத்து அவரை கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராணுவ வீரரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம் என ஒப்புக்கொண்டனர்.

பின்னர் போலீசார் இருவர் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்து வானதி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயகுமார் ஆகியோரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கணவனை கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது.

Views: - 17

0

0