வயல் வெளியில் புல் பறித்து கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட முயற்சி.!

24 February 2021, 7:34 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரிமாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் வயல் வெளியில் கால் நடைகளுக்கு புல் பறித்து கொண்டு நின்ற பேச்சியம்மாள் என்ற பெண்மணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த தங்க கம்மல்,செயின் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்ற மூன்று பேரை ஊர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைய காலமாக வழிப்பறி, கோவில் கொள்ளை, வர்த்தக நிறுவனங்களில் திருட்டு, வீடுகளுக்குள் புகுந்து பீரோ உடைப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. அதேபோல் இன்று அழகப்பபுரம் பகுதியில் வயல் வெளியில் கால் நடைகளுக்கு புல் பறித்து கொண்டு நின்ற பேச்சியம்மாள் என்ற பெண்மணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த தங்க கம்மல்,செயின் ஆகியவற்றை பறித்து கொண்டு மூன்று மர்ம ஆசாமிகள் தப்பி ஓடினார்கள்.

பேச்சியம்மாள் கூச்சலிடுவதை கவனித்த ஊர் மக்கள் மூன்று பேர்களையும் பிடித்து அஞ்சுகிராமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மைக்கேல், எழில், அன்றோ, என தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 2

0

0