நிலப்பிரச்சனையில் நர்ஸ் குத்திக்கொலை: உறவினர் வெறிச் செயல்

8 September 2020, 6:10 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நிலப்பிரச்சனையில் அக்காள்-தங்கையை உறவினர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் தங்கை பரிதாபமாக உயிரிழந்தார். அக்காள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள முக்காணி மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மீனா. இந்த தம்பதியருக்கு பிரியா (25), கனகா (23) என இரண்டு மகள்கள் உள்ளனர். கனகா நர்சிங் முடித்துவிட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மீனாவுக்கும் அவரது உடன் பிறந்த அண்ணன் தங்கராஜ் என்பவரது குடும்பத்திற்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் தங்கராஜ் மகன் மாரியப்பன் (27) என்பவர் முருகேசனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு முருகேசன் மற்றும் அவரது மனைவி அங்கு இல்லை. இதனால் அவரது 2 மகள்களிடம் மாரியப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அவர் , கனகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற பிரியாவையும் குத்தியுள்ளார். இதில் கனகா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரியா படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். உயிரிழந்த கனகாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பிரியா ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0