ஏரியில் மர்மமான முறையில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆடிட்டர்

9 March 2021, 3:47 pm
Quick Share

திருவண்ணாமலை: சென்னை தனியார் ஷூ கம்பெனியில் ஆடிட்டராக பணிபுரியும் அருண் குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் மர்மமான முறையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை புதுவாணியங்குள எட்டாவது தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 31) என்பவர் சென்னை தனியார் கம்பெனியில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக திருவண்ணாமலை வந்திருந்த அருண்குமார் ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் அருண்குமாரின் தந்தை மற்றும் தாயார் உறவினர் வீடு மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடி அலைந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் ஆண் சடலம் நீரில் மிதந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையின் உதவியுடன் ஆண் சடலத்தை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர்.

பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புதுவாணியங்குள தெருவில் காணாமல் போன அருண்குமார் என்பது தெரியவந்தது. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 24

0

0