வணிகர்களின் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறோம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி

3 March 2021, 7:52 pm
Quick Share

திருவண்ணாமலை: ஒரு சொல் மந்திரம் என்ற அடிப்படையில் ஒரே குரலாக வணிகர்களின் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகைபுரிந்த தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஒரு சொல் மந்திரம் என்ற அடிப்படையில் ஒரே குரலாக வணிகர்களின் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறோம். எங்களது வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டக்கூடிய நிலையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது.அனைத்து கட்சி தலைமையும் எட்டிப்பார்க்கக் கூடியவகையில் இந்த வாக்கு வங்கி ஒரே குரலில் ஒலிக்கும் என்பது உறுதி.

மேலும் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சி தேர்தல் அறிக்கையில் எழுத்துப்பூர்வமாக தரக்கூடிய கட்சியை பரிசீலனை செய்து எங்களுடைய ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிப்போம். அத்தியாவசிய விலையேற்றத்திற்கு வணிகர் பேரமைப்பு காரணம் இல்லையென்றால் பெட்ரோல் டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் தேவைகளை அறிந்து அரசு உற்பத்திகளை கூட்ட வேண்டும். பின்னர் விலையேற்றத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காக அரசுத்துறை அதிகாரிகளும் வணிகர் சங்க பிரதிநிதிகளும் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இணைத்து கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இதனை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றினால் விலைவாசி கட்டுக்குள் கொண்டுவர முடியும்.வணிகர் நல வாரியத்தில் ஜிஎஸ்டி எண் உள்ளவர்கள் மட்டுமே தற்போது பதிவு செய்து வருகின்றனர். அதனை மாற்றி அனைத்து வணிகர்களும் இதில் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெல்லம் பேரிடர் போன்ற காலங்களில் வணிகர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.

Views: - 1

0

0