20 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு முறை தண்ணீர் திறப்பு: அமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

Author: Udayaraman
9 October 2020, 10:53 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே ஆத்துப்பாளையம் அணையைத் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கா பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட கார்வழி ஊராட்சி ஆத்துப்பாளையம் அணை தேகமானது கடந்த காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் சாய கழிவு நீரானது அப்படியே வரும் நிலையில் இப்பகுதி பொதுமக்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த அணைக்கு நீர்வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வறட்சி பூமியான கார்வழி ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் இந்த நீர்த்தேக்கத்தை நம்பியுள்ள 19,000 பாசன விவசாயிகளின் நலனுக்காக திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஜீரோ டிஸ்சார்ஜ் சாயக்கழிவு என்ற முறையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தற்போது திறந்துவிடப்படும் நிலையில், கடந்த ஆண்டு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சீரிய முயற்சியில் இந்த அணையின் நீர்த்தேக்க மனதைத் திறந்து விடப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் திறந்து விடப்பட்ட இந்த அணையின் நீரானது கார் வெளிப் பகுதியில் இருந்து மன்மங்கலம் மற்றும் மான்கள் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19 ஆயிரம் 500 ஏக்கர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக நொய்யல் ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து வந்ததை அடுத்து ஆத்துப்பாளையம் அணை நிரம்பியது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று நேரில் திறந்து வைத்தார். முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இந்த அணையை திறக்க உத்தரவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஆணைக்கிணங்க தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இந்த அணை அணை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு சீரிய முறையில் செயல்பட்டு வருவதாகவும், இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த அணை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகிய என்னாளும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரின் உத்தரவினால் திறந்து விடப்பட்டதாகவும், இதனால் 19 ஆயிரம் 500 ஏக்கரில் விவசாயிகள் பாசனம் பெறுவர் என்றார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்/ கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 28

0

0