பதுக்கி வைத்திருந்த 25ஆயிரம் மதிப்பிலான இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

3 November 2020, 7:21 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 25ஆயிரம் மதிப்பிலான இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் வளையக்கார வீதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து வளையக்காரவீதி அடுத்துள்ள குப்பிபாலத்தில் வசித்து வரும் ஜெயந்தி என்பவரின் வீட்டில் சுமார் 50 மூட்டைகளில் 25ஆயிரம் மதிப்புள்ள இரண்டரை டன் ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைஅடுத்து நகர காவல் துறையினர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் ஜெயந்தி என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலில் தொடர்புடைய கருங்கல்பாளையத்தை சேர்ந்த முருகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இரண்டரை டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Views: - 15

0

0