வாலிபரை உருட்டுக் கட்டையால் தாக்கிய வழக்கில் 2 பேர் கைது: ஒருவர் தலைமறைவு

18 November 2020, 6:17 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடி அருகே வாலிபரை உருட்டுக் கட்டையால் தாக்கிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் பட்டறையில் வேலை செய்து வருகிறார். கடந்த தீபாவளி அன்று இரவு ஆகாஷ் , எஸ்.ஏ காலணி வழியாக சென்ற போது 3 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். மது வாங்கி தரும்படி கேட்டு தொடர்ந்து இவரை துன்புறுத்தியுள்ளனர்.

மது வாங்கி தர மறுக்கவே அருகிலிருந்த உருட்டுக்கட்டை எடுத்து சரமாரியாக தாககியுள்ளனர். இதில் ஆகாஷ் பலத்த காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து  எஸ்ஏ காலனி பகுதியை சேர்ந்த ராகேஷ், கிருபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர்.

Views: - 14

0

0