ரேஷன் அரிசியை கடத்தி கள்ளச் சந்தையில் விற்க முயன்ற 2 பேர் கைது

3 March 2021, 1:47 pm
Quick Share

சென்னை: சென்னையில் ரேஷன் அரிசியை கடத்தி கள்ளச் சந்தையில் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து, 2 டன் எடை கொண்ட ரேசன் அரிசிகளையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை கொளத்தூர் கண்ணகி நகர் , சுப்பிரமணி தெருவில் உள்ள மாவு மில் கடையில் ரேஷன் அரிசி இறக்கி வைத்து கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ராஜமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 55) மற்றும் பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த மோகன் (வயது 39) ஆகிய இரண்டு பேர் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியிருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 9

0

0