கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்ற இருவர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்….

Author: Udhayakumar Raman
25 September 2021, 7:57 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்ற இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், வைரவன். இவர்கள் இருவரும் சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் வேலைசெய்து வருகின்றனர். இவர்கள் டாஸ்மாக் கடை மூடிய பிறகு பதுக்கி வைத்துள்ள பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடமிருந்து 50 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 87

0

0