வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேர் கைது

1 February 2021, 8:21 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்கப்படுவதாக புளியந்தோப்பு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கன்னிகாபுரம் ஜோசப் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென்று உள்ளே நுழைந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் சிறிய பாக்கெட்டுகளாக பார்சல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த வீட்டில் சோதனை நடத்தி சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த ஜோதி வயது 36 என்ற பெண்ணையும் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் வயது 35 என்ற நபரையும் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலிசார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0