தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவர் கைது: 1.200 கிலோ கஞ்சா பறிமுதல்

3 November 2020, 6:01 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்துஇ அவர்களிடமிருந்த 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது தூத்துக்குடி ராஜபாண்டி நகர் சந்தனமாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 33) மாயக்கண்ணன் (24) என்பதும் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரையும், மாயக்கண்ணனையும் போலீஸார் கைது செய்தனர்.   

Views: - 13

0

0