சென்னை: வியாசர்பாடி மற்றும் அதன்சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் கஞ்சா விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வியாசர்பாடி எம்.கே.பி நகர் 15 வது மேற்கு குறுக்கு தெருவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்து அவர்கள் பையில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு மற்றும் வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் இருவரும் எம். கே. பி.நகரில் கஞ்சா விற்று வந்ததை ஒப்புக் கொண்டனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0