பல்வேறு குற்ற வழக்கில் தேடி வந்த இருவர் கைது

Author: Udhayakumar Raman
17 November 2021, 6:54 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தேடி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலத்தில் கடந்த 14ஆம் தேதி குறவர் இனத்தைச் சார்ந்த சக்திவேல், தர்மராஜ், பிரகாஷ் ஆகியோர்களை சின்னசேலம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற அவர்களை நான்கு நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருந்ததால் இவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து இன்று சின்னசேலம் காவல்துறையினர் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், கச்சராபாளையம்,

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாலி செயின் அறுத்து செல்வார்கள் என்று பிரகாஷ், தர்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 சவரன் நகை பறிமுதல் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட மூவரில் ஒருவரான சக்திவேலை இதுவரை நீதிமன்றத்திலோ, உறவினர்களிடமோ காவல்துறை ஒப்படைக்கவில்லை என்பதால் சக்திவேலை உடனடியாக மீட்டு தரவேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 140

0

0