பெண் விவகாரத்தில் மிரட்டல் விடுத்து பணம் பறிப்பு : தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உ்ளளிட்ட இருவர் கைது

15 July 2021, 8:32 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூரில் பெண் விவகாரத்தில் மிரட்டல் விடுத்து பணம் பறித்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி உ்ளளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் – பெருமாநல்லூர் அருகேயுள்ள, கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் அதே பகுதியில் தனது சகோதரருடன் இணைந்து பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தினேஷின் நண்பர்கள் கருப்பணசாமி, கணேஷ், திருமூர்த்தி. இதில் திருமூர்த்தி தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். நண்பர்களுக்கிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு சண்டையின் காரணமாக தினேஷிடமிருந்து பிரிந்து விட்டனர். இந்நிலையில் தினேஷிற்கும், அவரது பனியன் நிறுவனத்தில் பணி புரியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா(30) என்ற பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக கூறி தினேஷை அவரது நண்பர்கள் மிரட்டி ரூ 7,000 மற்றும் ரூ 21,000 என பலமுறை பணம் பறித்துள்ளனர்.

மேலும் சரண்யாவை மிரட்டியும் ரூ 10,000 பணம் பறித்துள்ளனர். இந்நிலையில் தினேஷின் சகோதரருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை தொடர்ந்து தினேஷின் நண்பர்கள் மீண்டும் அவரிடம் ஒரு லட்சம் பணம் தர வேண்டும் எனவும், பணம் தராவிட்டால் பெண்ணுடன் இருக்கும் தவறான தொடர்பை அனைவரிடமும் சொல்லி சகோதரரின் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து தினேஷ் பெருமநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரினை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பணசாமி, திருமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேஷை தேடி வருகின்றனர்.

Views: - 305

0

0