ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் பண்ணக்குட்டையில் மூழ்கி பலி

14 May 2021, 10:24 pm
Quick Share

தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கௌரிசெட்டிப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சாதிகா,வயது 5, தனஸ்ரீ வயது 3 , இரு மகள்கள் உள்ளனர். இரு சிறுமிகளையும் பாப்பாரப்பட்டி அடுத்த கொல்லுமாரப்பட்டி கிராமத்தில் உள்ள பாட்டிவீட்டில் முருகேசன் விட்டுள்ளார். இன்று இரு சிறுமிகளும் பாட்டி வீட்டின் அருகே இருந்த பண்ணைக்குட்டையில் அருகே அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரதவிதமாக பண்ணைக்குட்டையில் இரு சிறுமிகளும் தவறி விழுந்துள்ளனர். இதனை காண்ட அருகே இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் இரு சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா,தங்கை இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 34

0

0