கோத்தகிரியில் இரண்டு லட்சத்து பதினாராயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

4 March 2021, 3:57 pm
Quick Share

நீலகிரி: கோத்தகிரி பகுதியில் இரண்டு இடங்களில் இரண்டு லட்சத்து பதினாராயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் காரணமாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை அரசியல் பிரமுகர்கள் தருவதை தடுக்க தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் ஆணையம் சார்பாக தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகல் வேளைகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பனை சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒருவரிடம் இருந்து எழுபதாயிரம் (70,000) ரொக்கமும், இதே போன்று கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் சுமார் 1,46,000 கணக்கில் வராத பணமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது. எங்கு கொண்டு செல்ல படுகிறது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0