அம்பையில் அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை:பொதுமக்கள் பீதி…

Author: Udhayakumar Raman
16 September 2021, 2:59 pm
Quick Share

நெல்லை: அம்பையில் அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இந்த நிலையில் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சர்ச் அருகில் அப்துல் காதர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்துல் காதரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்ட போது, சாத்தான்குளம் கொலை வழக்கு ஒன்றில் அப்துல் காதருக்கு தொடர்பு இருப்பதாகவும் அதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அப்துல்காதர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் தங்கபாண்டி என்பவரும் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களில் அடுத்தடுத்து நான்கு கொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 182

0

0