மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபசாரம்… சென்னையை சேர்ந்த இளம்பெண் உட்பட இரண்டு பேர் கைது…

6 August 2020, 5:27 pm
Quick Share

கன்னியாகுமரி: கொரோனா காரணமாக கன்னியாகுமரியில் தனியார் விடுதிகள் தடை செய்யபட்டு உள்ளதால் அருகில் உள்ள கிராமங்களில் பங்களாக்கள் வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த இளம்பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏராளமான மசாஜ் செண்டர்கள் உள்ளன. தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர்கள் செயல்பட கன்னியாகுமரியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கன்னியாகுமரியில் தனியார் விடுதிகள் தடை செய்யபட்டு உள்ளதால் அருகில் உள்ள கிராமங்களில் பங்களாக்கள் வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபசாரம் தீவீரமாக நடந்து வருகிறது.

இதனை போலீசார் கண்டுகொள்வது இல்லை என குற்றசாட்டுகள் எழுது உள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி அருகே தெற்குகுண்டல் பகுதியில் பொது மக்கள் அதிகம் வசிக்கும் பிஸ்மி நகரில் உள்ள ஒரு மசாஜ் செண்டரில் சட்டத்திற்கு புறம்பாக மசாஜ் செண்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக கூறி ஊர் மக்கள் திரண்டு பங்களாவை முற்றுகையிட்டனர்.

இதனால் வேறு வழியின்றி போலீசார் வந்து சோதனை செய்ததில் அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது தெரிய வந்தது. இதையடுத்து ஒரு சென்னையை சேர்ந்த இளம்பெண் உள்பட வெளிமாவட்ட ஆண்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள சூழ்நிலையில் சட்டவிரோதமாக வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் பெண்களின் போட்டோக்களை அனுப்பி இளம் பெண்களை வைத்து பொதுமக்கள் அதிகமாக வசித்து வரும் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 2

0

0