ஈரோட்டில் கொரோனா சிகிச்சைக்காக இரண்டாயிரம் படுக்கைகள் தயார்: மாவட்ட ஆட்சியர் பேட்டி

14 April 2021, 5:32 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக இரண்டாயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாவட்டத்தில் கூடுதலாக மொடக்குறிச்சி,பவானி, பவானிசாகர் மற்றும் அந்தியூர் ஆகிய நான்கு பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக இரண்டாயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.மாவட்டத்தில் 80 சதவீதம் பொதுமக்கள் முககவசம் அணிவதாகவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் தடுப்பூசி தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும் கூறினார்.

Views: - 39

0

0