கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

12 September 2020, 5:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி தவளகுப்பம் எடையார்பாளையம் பகுதி என்.ஆர் நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தவளகுப்பம் போலிசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவலை அடுத்து ஆய்வாளர் தனசெல்வம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பனியில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு சந்தகேப்படும் படியாக சுற்றி திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ழரசன் (20) மற்றும் அரவிந்தன் (19) என்றும்,

அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டுவந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்த 22 கஞ்சா பொட்டலங்களை (130 கிராம்) பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து கொரோனா பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 6

0

0