ஆரணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு

16 September 2020, 4:21 pm
Quick Share

திருவள்ளூர்: ஆரணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு கவரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் ஏஎன் குப்பம் தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் உள்ள குட்டையில் மூழ்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கவரப்பேட்டை போலீசார்அங்கு சென்று உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து, அவர் குளிக்க வந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.