அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

22 September 2020, 1:23 pm
Quick Share

கோவை: கோவையில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை நிலையில் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் உக்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு, இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர், இது கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 10

0

0