மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த அடையாளம் தெரியாத இளைஞர்: போலீசார் விசாரணை

5 July 2021, 7:58 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிவன் கோவில் அருகில் அடையாளம் தெரியாத இளைஞர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாமரைக் குளம் ஏரியை ஒட்டி அமைந்துள்ள சிவன் கோவிலின் பின்புறம் 20 வயது மதிக்கத்தக்க கண்ணாடி அணிந்த இளைஞர் ஒருவர் அம்மன் கோவில் புடவையில் அங்குள்ள மரத்தில்தூக்கில் தொங்கியபடி உயிர் இழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து மரத்தில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்த இளைஞர் யார் என்பது குறித்தும் எதற்காக அவர் உயிரிழந்தார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 58

0

0