விவசாயப் பணிகள் உள்ளிட்டவைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம்: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி

19 September 2020, 6:24 pm
Quick Share

திருவாரூர்: தமிழகத்தில் தேவையை விட 25% கூடுதல் மின் உற்பத்தி இருப்பதால் விவசாயப் பணிகள் உள்ளிட்டவைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணி துணை மின் நிலையத்தில் கூடுதல் கட்டடம் மற்றும் மின்மாற்றிகளை இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறியதாவது தமிழகத்தில் தற்போது மின் உற்பத்தி 17682 மெகாவாட்டாக இருக்கிறது தேவையைவிட இது 25% கூடுதல் மின்சாரம் என்பதால் விவசாய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதுதான் என்பதால் தமிழக விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. ஒப்பந்த பண்ணைகள், சந்தைப்படுத்துதல், அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைப்பது, ஒரு பகுதியில் விளையக்கூடிய விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனைக்கு கொண்டு செல்வது என்பன போன்ற தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதுதான் மசோதாவாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் எந்தவித பாதிப்பும் தமிழகத்திற்கு ஏற்படாது. எனினும் இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அரசுகள் பேசிஇதில் முடிவு எடுத்துக் கொள்ளும் அதிகாரமும் மசோதாவில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Views: - 8

0

0