காதல் தோல்வியால் 21 வயது இளைஞர் தற்கொலை..!!

3 March 2021, 5:57 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காதல் தோல்வி காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட அஸ்மிதா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன் இவர் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விமல்குமார் (21) இவர் செங்கல்பட்டு மின்சார வாரியத்தில் பயிற்சி எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். நிலையில் இவரது வீட்டில் தந்தை தாமோதரன் வேலைக்குச் சென்றுள்ளார். அவரது தாயார் கடைக்குச் சென்றிருந்தபோது விமல்குமார் மட்டும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடைக்குச் சென்றதாயார் வந்து கதவை வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால்,

அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விமல்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த காவல்துறையினர் விமல்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுகாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணையில், விமல்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு பெண்ணும் காதலித்து வந்தது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்கு வேறுபாடு காரணமாக காதலி பேசாமல் போனதால் மனமுடைந்த விமல்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Views: - 20

0

0