அனைத்து பூஜாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்: பூஜாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

5 July 2021, 5:57 pm
Quick Share

திருவாரூர்: அனைத்து பூஜாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பூஜாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற கோயில்களில் பணியாற்றும் பூஜாரிகள் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூஜாரிகள் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் பூஜை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மாத வருமானம் என்பது கிடையாது, இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பூஜாரிகள் அனைத்துப் பூஜாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் வழங்கினார்கள்.

மேலும் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பூஜாரிகள் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், பூஜாரிகள் நல வாரியத்தை செம்மைப்படுத்தி உடனடியாக செயல்படுத்த வேண்டும், கோவில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், வட்டாட்சியர், கிராம கோவில் பூசாரிகள் இணைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அவர்கள் வாயிலாக கோரிக்கை மனு வழங்கினர். தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பூஜாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Views: - 93

0

0