சாலை விரிவாக்க பணிக்கு அகற்றிய மரத்திற்கு ஈடாக உடனடியாக மரம் நட வலியுறுத்தல்: இயற்கை ஆர்வலர்கள் கோட்டாட்சியரிடம் மனு

Author: Udhayakumar Raman
17 September 2021, 5:57 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் சாலை விரிவாக்க பணிக்கு அகற்றிய மரத்திற்கு ஈடாக உடனடியாக மரம் நட வலியுறுத்தி இயற்கை ஆர்வலர்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிக்காக 36 பழமை வாய்ந்த மரங்களை அகற்றினர். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரம் நடப்பட்டு ஒரு வருடம் பராமரிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இன்றுவரை வெட்டப்பட்ட 36 மரத்திற்கு ஈடாக 360 மரங்களை ஒப்பந்ததாரர் மூலம் நெடுஞ்சாலைத்துறை நட்டு பராமரிக்கப்படவில்லை அதனால் உடனடியாக மரங்களை நட வலியுறுத்தியும் இனிவரும் காலங்களில் சாலை விரிவாக்க பணிக்கு மரங்களை அகற்றாமல் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கவும் , திருக்கோவிலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் இயற்கை ஆர்வலர்கள் கொண்ட அமைப்பான நாடொப் பனசெய் அறக்கட்டளை சார்பில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மரங்களில் ஆறு மரங்களை எந்த ஒரு அடிப்படை காரணம் இன்றி அகற்றிய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடொப் பனசெய் அறக்கட்டளை சார்பில் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய் வருதினியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Views: - 43

0

0