காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் : பஜ்ஜி விற்பனை செய்து நூதன முறையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

Author: kavin kumar
12 January 2022, 6:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பஜ்ஜி விற்பனை செய்தும், ஷூவுக்கு பாலீஷ் போட்டும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால் அதன்படி இதுவரை ஒரு இடங்கள் கூட நிரப்பப்படவில்லை எனக்கூறியும், படித்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் தவித்து வருகிறார்கள், எனவே உடனடியாக அரசு காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வழுதாவூர் சாலையிக் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படித்த பட்டதாரிகள் பஜ்ஜி விற்பனை செய்தும், ஷூவுக்கு பாலீஷ் போட்டும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படித்த இளைஞர்கள் பட்டம் வாங்கும் அணியும் உடைகளை அணிந்து புதுச்சேரி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

Views: - 301

0

0