தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துதல்

23 March 2021, 4:26 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரியில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டது.

கோவிட்-19 இரண்டாம் அலை துவங்கி தற்போது கொரானா வைரஸின் தாக்கம் வேகமெடுத்து உள்ளதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுக்கும் தடுப்பு மருந்தான கோவிஷீல்டு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 24 தினங்களுக்கு முன்பு முதல் கட்டமாக தடுப்பூசி அரசுப் பணியாளர்கள் செலுத்தப்பட்டது.

அதன்பின் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்ட தேர்தல் பணியாற்றும் அனைத்து அரசு பணியாளர்களுக்கு தடுப்பு ஊசியை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செலுத்தினர்.

Views: - 9

0

0