தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழிசை ஆய்வு: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள்

Author: Udhayakumar Raman
20 September 2021, 5:58 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் கடுமையாக நோய்வாய்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது இந்நிலையில், புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் வீதியில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தார். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இணிப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பேரிடர் காலத்தில் அரசு விதிக்கும் வழிமுறைகளை கட்டாயம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் கடுமையாக நோய்வாய்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அறிவுறுத்தினார் தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் நோய் தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வரை சோதனை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Views: - 192

0

0