மதுரை மதிமுக செயலாளர் உடல்நலக் குறைவால் காலமானார்: கண்ணீர் மல்க வைகோ மரியாதை..!!

Author: Aarthi Sivakumar
24 March 2021, 5:14 pm
vaiko
Quick Share

மதுரை: உடல் நலக்குறைவால் காலமான மதுரை தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் கதிரேசன் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

மதுரை தெற்கு மாவட்ட மதிமுக செயலாளராக இருப்பவர் கதிரேசன். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கதிரேசன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மதிமுக கட்சியில் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.

இவர், மதிமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென்று இயற்கை எய்தினார். இந்த துயர செய்தி கேட்டு வருத்தமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கலிங்கப்பட்டியில் இருந்து புறப்பட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உள்ள கதிரேசன் வீட்டிற்குசென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவருடைய மனைவி மகன்கள் உட்பட குடும்பத்தினருக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்

Views: - 73

0

0