கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் வீடுகளில் வேல் பூஜை…

9 August 2020, 8:37 pm
Quick Share

கோவை: கோவையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து, இந்து மக்கள் கட்சியினர் வீடுகளில் வேல் பூஜை செய்யப்பட்டதுடன், கந்த சஷ்டி பாராயணமும் செய்யப்பட்டது.

‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை கண்டித்து, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் வேண்டுகோளை ஏற்று, இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பாஜக,ஹிந்து அமைப்புகள், மடாதிபதிகள், துறவியர்கள், ஆதினங்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படி, தமிழகத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வேல் மற்றும் முருகர் படத்தை வரைந்து பூஜை செய்தனர்.

இதே போல கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அவரது வீடுகளில் முருகனின் படம் மற்றும் முருகபெருமானின் வேலினை வைத்து பஞ்சாமிர்தத்தின் கூடிய பால் அபிஷேகம் பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர். கோடிக்கணக்கான முருக பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டவும், மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்கவும் இந்த பூஜைகள் செய்யப்படுவதாக கூறி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் முருக பெருமானின் பாடல்களை பாடி பஜனை செய்தனர். இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பிரசன்ன சுவாமி, மாநில அமைப்பு செயலாளர் கணபதி, ரவி ஜோதிட அணி செயல் தலைவர் மந்திராசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 7

0

0