மது அருந்திய போது கல்குவாரியில் விழுந்து மயமான வேன் கிளீனர்

21 November 2020, 3:49 pm
Quick Share

வேலூர்: செங்காநத்தம் கல்குவாரியில் மது அருந்திய போது கல்குவாரியில் விழுந்து மாயமான வேன் கிளினரின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த வேன் கிளினர் சுரேஷ் அவரும் அவரது நண்பர் வேன் ஓட்டுநருமான சதிஷ்குமார் என்பவரும் செங்காநத்தம் மலையில் உள்ள கல்குவாரியில் மது அருந்த சென்று மது அருந்திகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக போதையால் வேன் கிளினர் சுரேஷ் கல்குவாரி குட்டையில் விழுந்தார்.

பல மணி நேரமாகியும் திரும்பி வராததால் அவர் உள்ளே மூழ்கி இறந்திருக்கலாம் என அவரின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் சத்துவாச்சாரி காவல்துறையினர் சென்று கிளினர் நீரில் மூழ்கியது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷின் உடலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 13

0

0