சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு: சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி

30 August 2020, 8:06 pm
Quick Share

சென்னை: வானகரத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் வானகரம் மேட்டுக்குப்பம் ரோடு மசாஜ் சென்டரில் பெண்களிடம் கத்தியைய் காட்டி நகை பறிக்க முயன்ற அதே தெரு பகுதியில் நேற்று சாலையில் நடந்துசென்ற வாலிபரிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து இருவர் செல்போன் பறித்துள்ளனர். அப்போது வாலிபர் நிலைதடுமாறி கிழே விழுந்ததுள்ளார். இதைதொடர்ந்து செல்போன் பறித்துசெல்லும் இருவரையும் வாலிபர் துரத்தியும் அங்கிருந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி பெண்கள் உட்பட அனைவரும் தெரிவிக்கையில், இப்பகுதியில் காவல் நிலைய பூத் அமைத்தும் இதுபோன்று குற்றங்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் இரவில் வரமுடியாத சூழல் ஏற்படுவதாகவும், தெரிவிக்கின்றனர். மேலும் குடியிருப்போர் சங்கம் சார்பில் கேமிராக்கள் அமைத்தும் அடிக்கடி இதுபோன்று தொடர்ந்து நடைபெறுவதாகவும், எனவே இப்பகுதியில் வானகரத்திற்கு ஒரு காவல் நிலையம் அமைத்து தர வேண்டு்ம் என கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 0

0

0