அர்ச்சகர் பணி நிரந்தரம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம்:வழக்கறுத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது

2 September 2020, 7:55 pm
Quick Share

காஞ்சிபுரம்: அர்ச்சகரை பணி நிரந்தரம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கறுத்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தற்காலிக உதவி அர்ச்சகராக பணியாற்றி வருபவர் ஹரிஹரன். இக்கோயிலின் அர்ச்சகராக ஹரிஹரனின் தந்தை நாகராஜ் பணிபுரிந்து கடந்த வருடம் உடல் நலம் சுகம் இல்லாமல் இறந்து விட்டார் . அதனை முன்னிட்டு ஹரிஹரனுக்கு அர்ச்சகர் பணியை நிரந்தர படுத்தி தருவதற்கு கோவில் செயல் அலுவலர் சரவணன் ஹரிஹரனிடம் லஞ்சமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கேட்டு, இரு தவணையாக கொடுக்க வலியுறுத்தினார்.

 இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் கலையரசனிடம் ஹரி புகார் அளித்தார். செயல் அலுவலர் சரவணன் லஞ்சமாக கேட்ட முதல் தவணை 40 ஆயிரம் ரூபாயை கோவில் அலுவலகத்தில் ஹரி வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல் அலுவலர் சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து செயலாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0