வீரட்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்…

Author: kavin kumar
16 February 2022, 5:48 pm
Quick Share

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவத்தின் ஒன்பதாவது நாள் உற்சவமாக திருத்தேர் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9ம் தேதி மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ச்சியாக கோவிலில் தினந்தோறும் மாசிமக விழா நடைபெற்று வந்த நிலையில், இன்று 9ம் நாள் உற்சவமான திருத்தேர் விழா நடைபெற்றது.

வீரட்டேஸ்வரர் கோவிலுள்ள சிவானந்த வல்லி உடனுறை வீரட்டேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருத்தேர் ஆனது கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சுற்றி வந்து தேர் முற்றத்தை அடைந்தது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர்.

Views: - 319

0

0