காட்பாடி பகுதியில் வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

7 July 2021, 3:34 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவனிடமிருந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் வி.ஜி.ராவ் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக ஆங்காங்கே இருசக்கர வாகனம் திருட்டு போவதாக காட்பாடி காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. காட்பாடி காவல்துறையினர் தனிப்படை அமைத்து காட்பாடி முக்கிய சந்திப்பு பகுதியான காந்திநகர் பிள்ளையார்கோவில் அருகே கேலக்ஸி திரையங்கம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் ( எ) வெள்ளை என்ற வாலிபரை போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சுமார் ஏழு இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காட்பாடி போலீசார் 7 இருசக்கர வாகனங்களை மீட்டு மேற்கண்ட சுந்தர் என்கிற வெள்ளையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 392

0

0