நேரடியாக சாராய வேட்டைக்கு சென்ற வேலூர் எஸ்.பி: 5 ஆயிரம் லிட்டர் ஊறல் மற்றும் சாராய அடுப்புகள் அழிப்பு

12 June 2021, 9:04 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் அடுத்த ஏரிபட்டரை பூங்குளம் மலை அடிவாரத்தில் வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் ஆய்வு செய்து அங்கிருந்த 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராய அடுப்புகளை உடைத்து அழித்தார்.

கொரோனா பொது முடக்க காலத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க காவல் துறையினர் தொடர் சாராய வேட்டையில் ஈடுபட்டு வரும் சூழலில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏரிபட்டரை பூங்குளம் மலை அடிவாரத்திற்க்கு காவல் குழுவுடன் இருசக்கர வாகனத்தில் நேரடியாக சென்ற வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் அப்பகுதியில் ஆய்வு செய்து அங்கிருந்த 5000 லிட்டர் சாராய ஊரல் மற்றும் சாராய அடுப்புகளை உடைத்து அழித்தார். மேலும் அப்பகுதியில் முழுவதும் சாராயம் காய்ச்சுவதை அழிக்க குடியாத்தம் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Views: - 443

0

0