சர்வதேச கடல் துப்புரவு தினத்தையொட்டி கடலில் கிடந்த குப்பைகளை அள்ளிய வீரர்கள்

Author: Udhayakumar Raman
19 September 2021, 2:32 pm
Quick Share

புதுச்சேரி: சர்வதேச கடல் துப்புரவு தினத்தையொட்டி பாய்மர படகில் சென்ற வீரர்கள் கடலில் கிடந்த குப்பைகளை அள்ளினார்கள்.

சர்வதேச கடல் துப்புரவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பாய்மரப்படகு சங்கம் சார்பில் புதுச்சேரி தேங்காய்திட்டு மீன் பிடித்துறைமுக கடல் முகத்துவாரப்பகுதிகளில் உள்ள குப்பைகளை பாய்மரப்படகு மூலம் சென்று சேகரிக்க ஏற்பாடு செய்தது. இதற்காக புதுச்சேரி, சென்னை, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பாய்மரப்படகு.சங்கங்களை சேர்ந்த 12 பாய்மரப்படகுகளில் வந்த வீரர்கள் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை சேகரித்தனர். பாய்மரப்படகு பயன்பாடு இதை கற்றுக்கொண்டு தேசிய மற்றும் சர்வதேசப்போட்டிகளில் கலந்துக்கொள்ள் வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Views: - 193

0

0