உடல் நலம் பெற்று வீடு திரும்பிய விஜயகாந்த்: தேமுதிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Author: Udayaraman
2 October 2020, 9:46 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல் நலம் பெற்று வீடு திரும்பியதை அடுத்து அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியது அடுத்து அக்கட்சியினர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று உடல் நலம் சரியாகி விடும் திரும்பினார். இதனை அடுத்து தேமுதிகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் திருக்கோவில் நகர செயலாளர் காமராஜ் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Views: - 43

0

0