சசிகலா தன்னை ஒரு பலமான தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டும்: விஜயபிரபாகரன் பேட்டி

3 February 2021, 5:14 pm
Quick Share

திருச்சி: சசிகலா தன்னை ஒரு பலமான தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என திருச்சியில் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 52ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மூன்றாவது அணி அமைக்க கேப்டன் தயாராக உள்ளார் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மூன்றாவது அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை, அமெரிக்காவில் இருந்து கொண்டு எம்ஜிஆர் வெற்றி பெற்றது போல கேப்டன் பேசவேண்டும் நடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை, அவர் எங்கிருந்தாலும் வெற்றி பெறுவார். சசிகலா விடுதலையாகி உள்ளார். அவர் உடல்நிலை முதலில் சீராக அமையட்டும் அதன்பின் அவர் சென்னைக்கு வந்த பிறகு அவரைக் குறித்து பேசலாம்.

கேப்டன் உடல்நிலை சரியில்லாதது தேமுதிகவின் நிலை தெரிந்தும் ஓடியும் போகவில்லை அவர் மீண்டும் வருவார். தேமுதிகவை கொடுத்து விமர்சிக்கக் கூடிய கண்ட கண்ட செய்தித்தாள்களைக் எல்லாம் நாங்கள் பதிலளிக்க விருப்பமில்லை. கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே, உங்கள் ஒவ்வொருவருடைய யுகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. சசிகலா இதுவரை தன்னை ஒரு தலைவியாக எந்த இடத்திலும் நிரூபிக்கவில்லை. அவர் உடல்நிலை சரியாகி வந்த பிறகு அவர் சிறந்த தலைவியாக நிரூபிக்க வேண்டும். அவர் ஒரு பெண் என்பதால் தன்னுடைய தாய் அவர் ஆதரித்தார் இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.

Views: - 0

0

0