வில்லியனுார் ரவுடி கொலை வழக்கு: மேலும் ஐந்து பேர் கைது

22 February 2021, 8:22 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுார் ரவுடி படுகொலையில் தொடர்புடையதாக மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி உருளையன் பேட்டை கொசப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் – கீதா தம்பதியரின் மகன் மதன், பைக் மெக்கானிக்கான இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் வில்லியனுார் அடுத்த வி.மணவெளி மூகாம்பிகை நகரில் வீடுகட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி இரவு ஆரியப்பாளையம் சாராய ஆலை அருகே பைக்கில் சென்ற போது, மர்ம கும்பல் அவரை கொலை செய்து தப்பியது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி., ரங்கநாதன் தலைமையில்,

வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலையில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட உத்திரவாகினிப் பேட்டை விஜயசாரதி (எ) கட்ட விஜி, கரையான்பேட் பீமாராவ் நகர் பாகுபலி (எ) ரவீந்திரன், ஒதியம்பட்டு கே.வி நகர் வீர (எ) வீராரகு, ராஜா (எ) ராஜசேகர், மற்றும் செம்பியப்பாளையம் மூர்த்தி (எ) சத்தியமூர்த்தி, உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

Views: - 8

0

0