ஆண் புள்ளி மான் இறந்த நிலையில் மீட்பு: உடலைக் கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை

23 November 2020, 8:47 pm
Quick Share

விருதுநகர்: திருச்சுழி அருகே மூன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, எம்.ரெட்டியாபட்டி, கல்லூரணி மற்றும் பந்தல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமுதாய வனக் காடுகள் அதிகம் உள்ளன. இங்கு மான்கள், முயல்கள், காட்டு பன்றி, கீரி போன்ற காட்டு விலங்குகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திருச்சுழி அருகே எம். மீனாட்சிபுரம் கிராம காட்டுப் பகுதியில் 3 1/2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் உயிரிழந்த நிலையில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது.

கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் உயிரிழந்த புள்ளி மான் உடலைக் கைப்பற்றி உடல் கூறு ஆய்வு செய்து மானின் கொம்புகளை வெட்டி எடுத்த பின்னர் காட்டுப் பகுதியிலே மானின் உடலைக் குழிதோண்டி அடக்கம் செய்தனர். மேலும் மான் உடல் நலக் குறைவால் இறந்த தா? அல்லது தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் கடித்தனவா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0