சுய உதவி குழு மூலம் பெற்ற கடன்களை செலுத்த கட்டயப்படுத்துவதாக பெண்கள் புகார்…

17 August 2020, 4:39 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையை சுற்றி உள்ள கிராமங்களில் பெண்கள் சுய உதவி குழு மூலம் பெற்ற கடன்களை அதிக வட்டியுடன் திரும்ப செலுத்த கட்டயப்படுத்துவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட புளியம்பட்டி வெள்ளகோட்டை சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக தவணைத் தொகையை செலுத்த முடியாத நிலையில், இருந்தவர்களை தற்பொழுது சுய உதவிக் குழு நிறுவனங்கள் அதிக வட்டி செலுத்த யுடன் திரும்பி செலுத்த கூறி வற்புறுத்துவதாகவும்,

ஊரடங்கு காரணமாக போதிய வேலை இன்றி தாங்கள் கஷ்டப்பட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நிதி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு மேலும் நான்கு மாதகாலம் கடன் தொகையை செலுத்த கால அவகாசம் பெற்று தரவேண்டும் என கூறி அருப்புகோட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Views: - 30

0

0